செவ்வாய்க்கிழமை 20 நவம்பர் 2018

ஜனநாயக வாலிபர் சங்க நகரக் குழு மாநாடு

DIN | Published: 12th September 2018 04:23 AM


ஜனநாயக வாலிபர் சங்க நகரக்குழு மாநாடு காஞ்சிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க காஞ்சிபுரம் பெருநகர குழு மாநாடு தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில், நகரத் தலைவர் எஸ்.வெற்றிவேல் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் க.புருஷோத்தம்மன், ஆறுமுகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டு அறிக்கையை நகர செயலாளர் இ.சங்கர் முன்வைத்தார். அதன்மீது, விவாதம், 11 பேர் கொண்ட புதிய நகரக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். 
மாநாட்டை முடித்து வைத்து தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் நந்தன் சிறப்புரையாற்றினார். இம்மாநாட்டில், காஞ்சிபுரத்தில் உள்ள 51 வார்டுகளுக்கும் பாலாற்றுக்குடிநீர் வழங்குதல், மழைநீர் வீணாக சாக்கடையில் கலப்பதைத் தடுத்து நிறுத்தி, ஏரி குளங்களில் சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை விரிவுபடுத்தி, இரவு நேரத்தில் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திட இரவுப் பணிகளில் கூடுதலாக மருத்துவர்களை நியமித்தல், உயிர்காக்கும் மருந்து, மாத்திரைகளை தட்டுப்பாடில்லாமல் வழங்குதல், மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களின் காலிப் பணியிடங்களை உடனே நிரப்பக்கோருதல், காஞ்சிபுரம் நகராட்சியோடு இணைக்கப்பட்ட செவிலிமேடு, ஓரிக்கை, தேனம்பாக்கம், நத்தப்பேட்டை பகுதிகளுக்கு பாதாள சாக்கடைத் திட்டத்தை விரிவுபடுத்தக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், திரளான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கலந்துகொண்டனர்.

 

More from the section

மாமல்லபுரம் புராதனச் சின்னங்களை இன்று இலவசமாகப் பார்வையிடலாம்
14 வார்டுகளில் மக்கள் குறைதீர் முகாம்: குறைகளைக் கேட்டறிந்தார் எம்எல்ஏ
சித்த மருத்துவம் இணைந்தால்தான் ஆயுஷ் திட்டம் வெற்றி பெறும்
குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு
நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா