காஞ்சிபுரம்

தூய்மையே சேவை இயக்கம் பிரசார வாகனம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்

DIN


தூய்மையே சேவை இயக்கம் விழிப்புணர்வு ரதத்தை ஆட்சியர் பா.பொன்னையா புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
மத்திய அரசின் குடிநீர், சுகாதார அமைச்சகம் தூய்மையே சேவை இயக்க திட்டங்கள் செப்டம்பர் 15-லிருந்து அக்டோபர் 2 -ஆம் தேதி வரை நாடு முழுவதும் நடத்த திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தூய்மையே சேவை இயக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஊராட்சிகளில் செயல்படுத்திடும் வகையில் தூய்மைமே இயக்க வாகனத்தை ஆட்சியர் பா.பொன்னையா புதன்கிழமை தொடங்கி வைத்தார். 
இதைத்தொடர்ந்து ஆட்சியர் கூறுகையில், மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளில் பள்ளிகள், அங்கன்வாடிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொது இடங்களில் சுகாதாரத்தினை மேம்படுத்துதல், சுகாதார ஊக்குநர்களைக் கொண்டு தனிநபர் இல்லக் கழிப்பறைகளை முறையாக பயன்படுத்துதல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. அதுபோல், பள்ளி மாணவர்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களைக் கொண்டு சுகாதார விழிப்புணர்வுப் பேரணி நடத்துதல், நெகிழி இல்லா காஞ்சிபுரம் மாவட்டத்தை ஏற்படுத்தவும் தூய்மையே சேவை இயக்க திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.
இந்த விவரங்கள் அனைத்தையும் மாவட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்து சிறப்பாக செயல்படுத்துமாறு ஆட்சியர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 
நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் நூர்முகமது, அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
உத்தரமேரூரில்...
பட்டா கிராமத்தில் தூய்மையே சேவை இயக்க விழிப்புணர்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் வட்டம், சிறுதாமூர் ஊராட்சிக்குள்பட்ட பட்டா கிராமத்தில், மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் சார்பில், தூய்மையே சேவை இயக்க விழிப்புணர்வுக் கூட்டம், பொது இடங்களில் தூய்மை செய்யும் பணி ஆகியவை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரை தூய்மையே சேவை இயக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இத்திட்டத்தின் மூலம் கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்துப் பகுதிகளில் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, தூய்மைப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வட்டார வளர்ச்சி அலுவலர் மாரிச்சாமி தலைமை வகித்தார். தூய்மை பாரத இயக்கத்திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் ரமேஷ் வரவேற்றார். 
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் பேசியதாவது: கிராம மக்கள் தங்களது வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், சுகாதார நிலையங்கள், பேருந்து நிலையங்கள், நீர்நிலைகள் மற்றும் இதர பொது இடங்களில் தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை பயன்படுத்தக்கூடாது. கிராமப்புறங்களில் அனைவரும் கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டும் என்றார்.
இதைத்தொடர்ந்து, பட்டா கிராமத்தில் உள்ள கோயில், அங்கன்வாடி மையம், நீர்நிலைகள், கால்வாய்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். இதில், திரளான கிராமத்தினர் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT