மத்திய அரசைக் கண்டித்து இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

மத்திய பாஜக அரசைக் கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 செங்கல்பட்டில்  இளைஞர்  காங்கிரஸ்  நிர்வாகிகள்,  மத்திய அரசைக்  கண்டித்து  நடத்திய  கண்டன  ஆர்ப்பாட்டம்.
 செங்கல்பட்டில்  இளைஞர்  காங்கிரஸ்  நிர்வாகிகள்,  மத்திய அரசைக்  கண்டித்து  நடத்திய  கண்டன  ஆர்ப்பாட்டம்.


மத்திய பாஜக அரசைக் கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ரஃபேல் போர் விமான பேரம், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை தொழிலதிபர் விஜய் மல்லையா சந்தித்தது ஆகிய விவகாரங்களை முன்வைத்து, மத்திய அரசைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் செங்கல்பட்டு ராட்டினங்கிணறு பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி சிலை அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜே.எஸ்.கே.ஜான்சன்ராஜ் தலைமை வகித்தார்.
கட்சியின் தொகுதி தலைவர் பெரோஸ் காந்தி, நகர தலைவர் பாலா விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் எ.ஆனந்த் கலந்துகொண்டு மத்திய அரசு மக்கள் விரோதமாகச் செயல்படுவதாகவும், ரஃபேல் போர் விமானக் கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். அதைக் கண்டித்து அவர் உரையாற்றினார். 
மாவட்ட நிர்வாகிகள் மகேஷ், சலாஹுதீன், சுதர்சன், திவாகர், ஞானமூர்த்தி, சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இளைஞர் காங்கிரஸார் அட்டையால் செய்யப்பட்ட விமானத்தை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். 
காங்கிரஸ் நகர பொறுப்பாளர் ஜே.பாஸ்கர், நிர்வாகிகள் டி.ஜெயராமன், பேட்டரி கனகராஜ், முருகன், பழவேலி காமராஜ், ஆர்.குமரவேல், பார்த்தசாரதி, பாண்டியன், பவளவண்ணன், சின்னக்கடை ராஜேந்திரன், மாநில நிர்வாகிகள் புதுப்பட்டினம் சி.ஆர்.பெருமாள் உள்ளிட்ட மாநில, மாவட்ட நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அவர்கள் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து கண்ணில் கருப்பு ரிப்பன் கட்டிக்கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர். 
முன்னதாக, ராட்டினங்கிணறு அருகில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com