சுவாமி விவேகானந்தா பள்ளியில் சுமங்கலி பூஜை

செங்கல்பட்டு அண்ணா நகர் 8-ஆவது குறுக்குத் தெருவில் உள்ள ஸ்ரீ கே.சி.ஜே. சுவாமி விவேகானந்தா பள்ளியின் சார்பில் சுமங்கலி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டு அண்ணா நகர் 8-ஆவது குறுக்குத் தெருவில் உள்ள ஸ்ரீ கே.சி.ஜே. சுவாமி விவேகானந்தா பள்ளியின் சார்பில் சுமங்கலி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 தமிழர்களின் பெட்டகமாக தொன்றுதொட்டு விளங்கும் பண்பாட்டையும், கலாசாரத்தையும் பேணும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக செங்கல்பட்டு அண்ணா நகரில் இயங்கி வரும் சுவாமி விவேகானந்தா பள்ளியின் சார்பில் சுமங்கலி பூஜை நடைபெற்று வருகிறது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த பூஜையில் செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், மேலமையூர், வல்லம், என்.ஜி.ஜி.ஓ. நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட சுமங்கலிகள் கலந்துகொண்டு பூஜைகளை நடத்தினர்.
 இதில் கலந்துகொண்ட சுமங்கலிகளுக்கு பள்ளி நிர்வாகத்தினர், புதிய புடவைகளை வழங்கினர். அவர்களை வரிசையாக அமர வைத்து மாலை அணிவித்து சந்தன நலங்கு வைத்து மஞ்சள், குங்குமம் வழங்கப்பட்டது. குத்துவிளக்கில் லலிதாம்பிகை அலங்காரத்தில் காட்சியளிக்க சுமங்கலி பூஜை நடத்தப்பட்டது. குடும்பம் சுபிட்சமாக இருக்கவும், நாடும், மக்களும் செழிப்புடனும், அமைதியுடனும் வாழவும் பிரார்த்தனைகள் செய்யப்பட்டு, லலிதா சகஸ்ரநாம பாராயணம், பக்திப்பாடல்களுடன் அர்ச்சனை ஸ்லோகங்கள் சொல்லப்பட்டு, பூஜை நடைபெற்றது.
 சுவாமி விவேகானந்தா பள்ளிகளின் கல்விக் குழும அதிகாரி அனுராதா வாசுதேவன் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு பூஜையினை தொடங்கி வைத்தார். தாளாளர் சந்திரசேகரன் வழிகாட்டுதலில் நடைபெற்ற விழாவில் பள்ளி முதல்வர் மாலினி, அனைவரையும் வரவேற்றார். நிகழ்வில், வெங்கடேஸ்வரா கட்டுமான நிறுவன மேலாண்மை அதிகாரி வெங்கடேசன், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாநில இணைச் செயலாளர் இராம.ராஜசேகரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
 பின்னர் மங்கல இசைப்பாடல்கள் பாடப்பட்டன. இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு அளிக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் தாளாளர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com