காஞ்சிபுரம்

வாக்காளர் பட்டியல் பார்வையாளர் தலைமையில் அனைத்துக் கட்சி ஆய்வுக்கூட்டம்

தினமணி

வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அனில் மேஷ்ராம் தலைமையில் அனைத்துக் கட்சி ஆய்வுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பு சுருக்க முறை திருத்தம், சிறப்பு சேர்க்கை, வாக்காளர் பட்டியல் தொடர் செம்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, கடந்த 1ஆம் தேதி முதல் அக்டோபர் 10 ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் , முகவரி மாற்றம் தொடர்பாக 6, 6-ஏ, 7, 8, 8-ஏ படிவங்கள் பெறப்பட்டு வருகின்றன. மேலும், பொதுமக்களின் வசதிக்காக அனைத்து வட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
 இப்பணிகளைக் கண்காணிப்பதற்கு தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் பட்டியல் பார்வையாளராக, மாநில திட்டக்குழு உறுப்பினர் அனில் மேஷ்ராம் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, அவரது தலைமையில், மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, மாவட்ட வருவாய் அலுவலர் நூர்முகமது, அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
 இக்கூட்டத்தில், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து வாக்காளர் பட்டியல் பார்வையாளரிடம் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் பச்சையப்பன், ஆந்திரசன் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்று வரும் சிறப்பு முகாமில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்குச்சாவடி முகவரின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில், நேர்முக உதவியாளர் (தேர்தல்) ரவிச்சந்திரன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) வாசுதேவன், வாக்காளர் பதிவு அலுவலர்கள், வருவாய் கோட்ட அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

SCROLL FOR NEXT