ஊதியக் குழு பரிந்துரையை நிறைவேற்றக் கோரி: கிராமிய அஞ்சல் ஊழியர்கள் உண்ணாவிரதம்

ஊதியக் குழுவின் பரிந்துரையை நிறைவேற்ற வலியுறுத்தி கிராமிய அஞ்கல் ஊழியர்கள் செங்கல்பட்டில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 உண்ணாவிரதப் போராட்டத்தில்  கோரிக்கைகளை  வலியுறுத்தி  கோஷங்களை  எழுப்பிய கிராமிய அஞ்சலக ஊழியர்கள்.
 உண்ணாவிரதப் போராட்டத்தில்  கோரிக்கைகளை  வலியுறுத்தி  கோஷங்களை  எழுப்பிய கிராமிய அஞ்சலக ஊழியர்கள்.

ஊதியக் குழுவின் பரிந்துரையை நிறைவேற்ற வலியுறுத்தி கிராமிய அஞ்கல் ஊழியர்கள் செங்கல்பட்டில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றக் கோரி அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் மத்திய மாநில அமைப்புகள் வலியுறுத்தின. 
அவை கேட்டுக் கொண்டதன் பேரில் செப்டம்பர் 25, அக்டோபர் 4 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மூன்று கட்ட உண்ணாவிரதப் போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதையடுத்து முதல் கட்டமாக செங்கல்பட்டு அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
16 அம்சக் கோரிக்கைகளான ஊதியக் குழுவின் பரிந்துரைகளை கடந்த 2016 ஜனவரி 1ஆம் தேதி முதல் அமல்படுத்தவும், பணிக்கொடை ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் என்ற முரண்பாடான ஆணையை மாற்றி ஊதியக் குழுவின் பரிந்துரையான ரூ. 5 லட்சத்தை வழங்கவும், குழுக் காப்பீட்டுக்கு ரூ.500 பிடித்தம் செய்து ரூ.5 லட்சம் வழங்கிடவும், பணிமூப்பு அடிப்படையில் ஊதியக் குழு பரிந்துரைத்த படிகளை வழங்கிடவும், பணியிட மாறுதல்கள் தொடர்பாக தற்போது உள்ள ஆணையை நீக்கி கோட்ட, மண்டல, மாநில அளவில் மாற்றி அமைத்திடவும், மாதத்தில் கடைசி நாளை பணி ஓய்வு நாளாக அறிவிக்கவும், ஒரு நபர் அலுவலகமாக இல்லாமல் மேலும் ஒரு நபரை பணியமர்த்தவும், மருத்துவ வசதிகள் வழங்கவும், மருத்துவக் காப்பீடு மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் சிகிச்சை பெற அனுமதி வழங்கவும் கோரி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. 
செங்கல்பட்டில் நடைபெற்ற இந்த முதல் கட்டப் போராட்டத்திற்கு அமைப்பின் செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். தலைவர் பி.சுந்தர்ராஜ், பொருளாளர் ஜி.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்து, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். செங்கல்பட்டு கோட்டத்திற்கு உட்பட்ட கிராமப்புறப் பகுதிகளில் உள்ள கிராமிய அஞ்சலக ஊழியர்கள் கோஷங்களை எழுப்பி உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com