கோயில்களில் ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

ராகு கேது பெயர்ச்சியையொட்டி கோயில்களில் உள்ள ராகு, கேது விக்ரகங்களுக்கு சிறப்பு பூஜைகள் புதன்கிழமை மாலை நடைபெற்றன. 
மாமல்லபுரம்  மல்லிகேஸ்வரர்  கோயிலில்  ராகு-கேது  பெயர்ச்சியையொட்டி நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்.
மாமல்லபுரம்  மல்லிகேஸ்வரர்  கோயிலில்  ராகு-கேது  பெயர்ச்சியையொட்டி நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்.


ராகு கேது பெயர்ச்சியையொட்டி கோயில்களில் உள்ள ராகு, கேது விக்ரகங்களுக்கு சிறப்பு பூஜைகள் புதன்கிழமை மாலை நடைபெற்றன. 
செங்கல்பட்டு வ.உ.சி. தெருவில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில், பெரியநத்தம் கைலாசநாதர் கோயில், கோட்டைவாயிலில் உள்ள நீதிவியாகர் கோயில், ஜிஎஸ்டி சாலை சக்திவிநாயகர் கோயில், அண்ணா நகர் எல்லையம்மன் கோயில், 7ஆவது குறுக்குத் தெருவில் உள்ள ரத்தின விநாயகர் கோயில்,  மேட்டுத் தெரு செங்கழுநீர் விநாயகர் கோயில், ஜீவானந்தம் தெருவில் உள்ள அங்காளம்மன் கோயில், முருகேசனார் தெருவில் உள்ள கங்கையம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நவக்கிரக சந்நிதிகளில் உள்ள ராகு, கேது விக்ரகங்களுக்கு பால், தயிர் மஞ்சள் சந்தனம், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. 
அதைத் தொடர்ந்து ராகு, கேதுவுக்கு சிறப்பு அலங்காரம், மகாதீபாராதனை நடைபெற்றது.  
இதேபோல், திருக்கழுகுன்றம் தாழக்கோயில் பக்தவத்சலேஸ்வரர் கோயில், திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் ஆகியவற்றிலும் ராகு, கேது சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
 இதேபோல் மாமல்லபுரத்தில் உள்ள மல்லிகேஸ்வரி சமேத மல்லிகேஸ்வரர் கோயிலில் நவக்கிரக சந்நிதியில் உள்ள ராகு, கேதுவுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அலங்காரம், மகாதீபாராதனை ஆகியவை நடைபெற்றன. 
இதேபோல் அனைத்து சிவன் கோயில்கள், விநாயகர் கோயில்கள், அம்மன் கோயில்களிலும் நவக்கிரக சந்நிதியில் உள்ள ராகு, கேது விக்ரகங்களுக்கும், தனியாக உள்ள ராகு, கேதுவுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் ராசியில் ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் ராகு-கேது பெயர்ச்சியையொட்டி சிறப்பு பூஜைகளில் பங்கேற்று, சங்கல்பம் செய்து தோஷ நிவர்த்திக்காக வேண்டிக் கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com