சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாமல்லபுரம் காவல் நண்பர்கள் குழு, வணிகர்கள் சங்கம், அரிமா சங்கம் சார்பில் சாலைப் பாதுகாப்பு வார விழா, தலைக்கவச விழிப்புணர்வு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

மாமல்லபுரம் காவல் நண்பர்கள் குழு, வணிகர்கள் சங்கம், அரிமா சங்கம் சார்பில் சாலைப் பாதுகாப்பு வார விழா, தலைக்கவச விழிப்புணர்வு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாமல்லபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்றன.
 நிகழ்ச்சிக்கு, வட்டார வியாபாரிகள் சங்கத் தலைவர் ஆர்.ராஜசேகர் தலைமை வகித்தார். மாமல்லபுரம் பல்லவன் சிட்டி அரிமா சங்கத்தின் தலைவர் பி.ஜெயச்சந்திர பாண்டியன் முன்னிலை வகித்தார். காவல் நண்பர்கள் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.ரத்தினம் வரவேற்றார்.
 மாமல்லபுரம் காவல் கண்காணிப்பாளர் சுப்பாராஜு விழிப்புணர்வுப் பேரணியை தொடங்கி வைத்துப் பேசினார்.
 பேரணியில் பொதுமக்களுக்கு காவல் நண்பர்கள் குழுவினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பின்னர் நடைபெற்ற கூட்டத்தில், காவல் ஆய்வாளர்கள் மாமல்லபுரம் ரவிகுமார், திருப்போரூர் வி.கண்ணன், திருக்கழுகுன்றம் பி.அய்யனாரப்பன், கேளம்பாக்கம் எம்.பாண்டி, கல்பாக்கம் சி.ராமு ஆகியோர் பேசினர். மாமல்லபுரம் பல்லவன் சிட்டி அரிமா சங்கத்தின் செயலர் பி.கணபதி, பொருளாளர் எஸ்.மணிகண்டமூர்த்தி, காவல் உதவி ஆய்வாளர்கள் ஜி.மோகன் (கூவத்தூர்), எம்.முத்துகுமார் (சதுரங்கப்பட்டினம்), எஸ்.அருள்மணி (மானாமதி), எம்.அன்பு (திருப்போரூர்), டி.பாஸ்கரன் (தாழம்பூர்), காயார் டி.சுசீலா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com