ரூ. 47 லட்சத்தில் சாலை சீரமைப்புப் பணிகள் தொடக்கம்

வல்லம் ஊராட்சியில் உள்ள 6 தெருக்களைச் சீரமைக்க ரூ. 47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதற்கான பணி தெருச் சாலைகள் சீரமைக்கும் பணி பூமி பூஜையுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

வல்லம் ஊராட்சியில் உள்ள 6 தெருக்களைச் சீரமைக்க ரூ. 47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதற்கான பணி தெருச் சாலைகள் சீரமைக்கும் பணி பூமி பூஜையுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
 ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், வல்லம் ஊராட்சிக்குள்பட்ட வல்லம், வடகால் மற்றும் கிருஸ்து கண்டிகை பகுதியில் உள்ள தெருக்கள் கடந்த பல வருடங்களாக சீரமைக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், இச்சாலைகளை சீரமைக்க வேண்டும் என அரசுக்கு இப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, கிறிஸ்து கண்டிகை பகுதியில் உள்ள ராயர் தெரு, குழந்தை ஏசுநாதர் தெரு, காவேரி நகர் உள்ளிட்ட 6 தெருக்களை பேவர் பிளாக் சாலைகளாக மாற்ற ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ. 47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இச்சாலை சீரமைப்புப் பணிகளுக்கான பூமி பூஜை கிறிஸ்து கண்டிகை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 இதில் ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பழனி கலந்துகொண்டு, பூமி பூஜை செய்து, பணிகளை தொடங்கி வைத்தார்.
 இதில் ஒன்றியச் செயலர் எறையூர் முனுசாமி, முன்னாள் ஒன்றியச் செயலாளர் செந்தில்ராஜன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் சிவகுமார், ஒன்றிய இளைஞர் அணிச் செயலர் சேதுராஜ இளவழகன், வல்லம் முன்னாள் ஊராட்சித் தலைவர் விமலேவிதர்மன், அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com