மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்க தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி

மதுராந்தகம் கல்வி வட்டாரத்திலுள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிப்பது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.


மதுராந்தகம் கல்வி வட்டாரத்திலுள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிப்பது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
மதுராந்தகம் கல்வி வட்டாரத்தில் உள்ள சித்தாமூர், லத்தூர், அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் பிப். 18-ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 80 தலைமை ஆசிரியர்கள் பங்கேற்று வருகின்றனர். 
மதுராந்தகம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் இந்த முகாமில் பள்ளியின் முன்னேற்றம், மாணவர்களின் கற்றல் திறன், வகுப்பறை செயல்பாடுகள் ஆகியவை குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் மூன்றாம் நாள் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, காஞ்சிபுரம் மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலர் ஜெ. ஆஞ்சலோ இருதயசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பயிற்சி முகாமின் முக்கியத்துவம் குறித்து ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது.
இம்முகாமில் மாவட்டக் கல்வி அலுவலர் கு.முரளி, மதுராந்தகம் வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆர்.எழிலரசி, வி.கற்பகம், மேற்பார்வையாளர் ஜெயசுதா, மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் மு. சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com