திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

திருப்போரூர் கந்த சுவாமி கோயிலில் நடைபெற்று வந்த  பிரம்மோற்சவத்தின் நிறைவையொட்டி, வெள்ளிக்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.


திருப்போரூர் கந்த சுவாமி கோயிலில் நடைபெற்று வந்த  பிரம்மோற்சவத்தின் நிறைவையொட்டி, வெள்ளிக்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூரில் வள்ளி, தெய்வானை உடனுறை கந்தசுவாமி கோயில் அமைந்துள்ளது. 
இக்கோயிலில் முருகப் பெருமானுக்கு கடந்த 9-ஆம் தேதி பிரம்மோற்சவம் தொடங்கியது. இந்த விழாவையொட்டி, தினந்தோறும் பகல், இரவு ஆகிய இரு வேளைகளும் விநாயகர் உற்சவம் நடைபெற்றது. தொட்டி உற்சவம், உபதேச உற்சவம், மங்களகிரி உற்சவம், பஞ்சமூர்த்தி புறப்பாடு, மங்களாசாசன உற்சவம், வெள்ளித் தொட்டி உற்சவம், பார்வேட்டை உற்சவம், விமான  உற்சவம் ஆகியவை நடைபெற்றன.
கிளி வாகனம், பூத வாகனம்,  புருஷாமிருக வாகனம், வெள்ளி அன்ன வாகனம், ஆட்டுக்கிடா வாகனம், வெள்ளி மயில் வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், சிம்ம வாகனம், தங்க மயில் வாகனம் ஆகியவற்றில் முருகப் பெருமான் வீதியுலா வந்தார். தேரோட்டமும் சிறப்பாக நடைபெற்றது. ஆறுமுக சுவாமிக்கு அபிஷேகம், மாலை வேளைகளில் தெப்போற்சவம், மெளன உற்சவம், சண்டிகேஸ்வரர் உற்சவம், கிரிவலம், பந்தம்பரி உற்சவம், வேடம்பரி பிரபல உற்சவம் ஆகியவையும், வீதிப் புறப்பாடும் நடைபெற்றன. 
இதையடுத்து, பிரம்மோற்சவ நிறைவையொட்டி வெள்ளிக்கிழமை திருக்கல்யாண உற்சவத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மூலவருக்கு சிறப்பு பூஜைகளும், முத்தங்கி சேவையும் நடத்தப்பட்டன. 
உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. 
பின்னர், முருகன், வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சுமங்கலிகள், கன்னிப் பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் இந்த வழிபாட்டில் கலந்துகொண்டு முருகப் பெருமானை தரிசித்தனர். பக்தர்களுக்கு திருமண விருந்தும், பிரசாதமும் வழங்கப்பட்டன. மாலையில் மயில் வாகனத்தில் முருகன் வீதிப் புறப்பாடு நடைபெற்றது. 
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் எம்.சக்திவேல், தக்கார் க.ரமணி, மேலாளர் வெற்றி உள்ளிட்ட கோயில்  பணியாளர்கள், சிவாச்சாரியார்கள், பொதுமக்கள் மற்றும் ஸ்ரீபாதம்தாங்கிகள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com