காவல் மாணவர் படை சார்பில் தேர்தல் விழிப்புணர்வுப் பேரணி

தேர்தலில் நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, காவல் மாணவர் படை சார்பில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. 
காவல் மாணவர் படை சார்பில் தேர்தல் விழிப்புணர்வுப் பேரணி


தேர்தலில் நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, காவல் மாணவர் படை சார்பில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. 
ஸ்ரீபெரும்புதுôர் காவல் உள்கோட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களை இணைத்து, ஸ்ரீபெரும்புதுர் துணைக் காவல் கண்காணிப்பாளர்  ராஜேஷ்கண்ணா தலைமையில், காவல் மாணவர் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் 300-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்கள் இணைந்துள்ளனர். இந்த மாணவர்களுக்கு காவலர்கள் போல் சீருடை வழங்கப்பட்டுள்ளது. 
இந்த மாணவர்களுக்கு, காவல் உதவி ஆய்வாளர்கள் அரசுப் பள்ளிக்குச் சென்று, காவலர் அணிவகுப்பு பயிற்சி, சமூக நலம் சார்ந்த பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் நூறு சதவீத வாக்குப் பதிவு நடக்க வேண்டும் என வலியுறுத்தி, விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. 
ஸ்ரீபெரும்புதூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணா தலைமையில் நடைபெற்ற இப்பேரணியை, ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி உதவித் தேர்தல் அலுவலர் சக்திவேல் தொடங்கி வைத்தார்.
ஸ்ரீபெரும்புதுôர் ராமானுஜர் வளைவு பகுதியில் தொடங்கிய பேரணி, பேருந்து நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், திருமங்கையாழ்வார் தெரு வழியாகச் சென்று, தேரடி பகுதியில் நிறைவடைந்தது.
இதில், நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும், எனது வாக்கு விற்பனைக்கு அல்ல உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளை கையில் ஏந்தி பேரணியாகச் சென்றனர். வட்டாட்சியர் காஞ்சனமாலா, ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி செயல் அலுவலர் தன்ராஜ், ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் விநாயகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com