வேளாண் துறை பூச்சி மருந்து விற்பனை மையம் திறப்பு

கும்மிடிப்பூண்டி வேளாண் துறையின் சார்பில் உழவர் உற்பத்தியாளர் குழுவினர் நடத்தும் பூச்சி மருந்து விற்பனை மையம் மேலக்கழனி கிராமத்தில் சனிக்கிழமை திறந்து


கும்மிடிப்பூண்டி வேளாண் துறையின் சார்பில் உழவர் உற்பத்தியாளர் குழுவினர் நடத்தும் பூச்சி மருந்து விற்பனை மையம் மேலக்கழனி கிராமத்தில் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர், ராக்கம்பாளையம் பகுதி உழவர் உற்பத்தியாளர் குழுவின் சார்பில் வேளாண் துறையின் கூட்டுப் பண்ணைத் திட்டத்தின் கீழ் பூச்சி மருந்து விற்பனை மையம் ராக்கம்பாளையம் கிராமத்தில் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில், திருவள்ளூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கோ.பாண்டியன் கலந்துகொண்டு பூச்சி மருந்து விற்பனை மையத்தைத் திறந்து வைத்தார். வேளாண் விற்பனை துணை இயக்குநர் ஆர்.திலகவதி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
அப்போது, கூட்டுப் பண்ணைய திட்டம் குறித்தும், விவசாயிகள் விளை பொருளை மதிப்புக் கூட்டி விற்பனை செய்வது குறித்தும், இயற்கை வேளாண்மை, இயற்கை பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்துவது குறித்தும் வேளாண் அதிகாரிகள் பேசினார்கள்.
இதைத் தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி வேளாண் உதவி இயக்குநர்(பொறுப்பு) க.பத்மநாபன் சம்பா பருவத்தில் பயிர்களில் பூச்சித் தாக்குதல் குறித்தும், அதற்கான உரிய மருந்துகளைத் தெளித்து பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறை பற்றியும் எடுத்துக் கூறினார்.
இதில், துணை வேளாண் அலுவலர் சுகுமார், உதவி விதை அலுவலர் கார்த்திகேயன், உதவி வேளாண் அலுவலர்கள் சிவக்குமார், முருகன், சுகுணா, அருள்முருகன், ஆத்மா, திட்ட வட்டார மேலாளர் மணி ஆகியோர் கலந்துகொண்டனர். மேலக்கழனி உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் கோபி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com