பசுமைத் தாயகம் அமைப்பினர் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு

பசுமைத் தாயகம் அமைப்பின் திருவள்ளூர் மாவட்டக் கிளை சார்பில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு


பசுமைத் தாயகம் அமைப்பின் திருவள்ளூர் மாவட்டக் கிளை சார்பில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் டெங்கு காயச்சல் தடுப்பு நடவடிக்கையாக கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கும் நிகழ்வு கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
நிகழ்விற்கு பசுமைத் தாயகம் அமைப்பின் மாநில ஆலோசகர் மா.செல்வராஜ் தலைமை வகித்து பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீரை வழங்கினார். நிகழ்வில், மாவட்ட ஆலோசகர் குபேந்திரன், மாநில துணைச் செயலாளர் ஆ.பத்மநாபன், மாவட்டச் செயலாளர் முத்து, தொகுதி அமைப்பு செயலாளர் ஆர்.டி.முத்து, தொகுதி தலைவர் சுமலதா, சு.வே.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, பசுமைத் தாயகம் சார்பில் கும்மிடிப்பூண்டி பகுதியில் ஆட்டோவில் சென்று ஒலிபெருக்கி மூலம் டெங்கு விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது. பின்னர், நகரின் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் அந்த அமைப்பினர் டெங்கு விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டதோடு, பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரையும் வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com