ரூ.3 லட்சம் நிவாரணப் பொருள்களை வழங்கிய ஆசிரியர்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை திருத்தணி கல்வி மாவட்ட

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை திருத்தணி கல்வி மாவட்ட ஆசிரியர்கள் திங்கள்கிழமை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பிவைத்தனர்.
கஜா புயலால்  பாதிக்கப்பட்ட நாகை மாவட்ட மக்களுக்கு அனைத்து ஆசிரியர்களும் உதவ வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.ராஜேந்திரன் உத்தரவிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து, திருத்தணி  கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் சார்பில்,  ரூ.3 லட்சம் மதிப்புள்ள அரிசி மூட்டைகள், பருப்பு வகைகள், சர்க்கரை, பிஸ்கட்டுகள், பெட்ஷீட் உள்பட பல்வேறு  பொருள்களை அனைத்துப் பள்ளி ஆசிரியர்கள் சேகரித்தனர்.  
தொடர்ந்து,  மாவட்டக் கல்வி அலுவலர் முனிசுப்பராயன் தலைமையில், அரிசி 25 கிலோ கொண்ட 456 மூட்டைகள், துவரம் பருப்பு 75 கிலோ, 3 பெட்டி சமையல் எண்ணெய், 4 பெட்டி பிஸ்கட், 40 கிலோ மைதா, 30 கிலோ கோதுமை, 97 போர்வை, 116 துண்டு, 30 லுங்கி, 2 பெட்டி மெழுகுவர்த்தி, 50  கோரைப்பாய், 1 பெட்டி சோப், 1 பெட்டி பற்பசை போன்ற பொருள்கள் அனைத்தும் திருவள்ளூர் மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.ராஜேந்திரன் கூறியது: கஜா புயலால் நாகை, கடலூர், திருவாரூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பலர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அங்கு மின்வசதி இல்லாததால் இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் உடனடியாக கொண்டு செல்லப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com