வியாழக்கிழமை 20 செப்டம்பர் 2018

மீஞ்சூரில் வடிவமைக்கப்படும் கருணாநிதி சிலை: மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்

DIN | Published: 12th September 2018 01:18 AM

மீஞ்சூர், புதுப்பேடு பகுதியில் உள்ள சிற்பக் கூடத்தில், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் வெண்கலச் சிலை வடிவமைக்கப்பட்டு வருவகிறது. இதனை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டார்.   
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள மீஞ்சூர் புதுப்பேடு பகுதியில், சிலை வடிவமைக்கும் சிற்பக் கூடம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு சிலைகளை சிற்பி தீனதயாளன் தத்ரூபமாக வடிவமைத்து வருகிறார். இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 8 அடி உயர முழு உருவ வெண்கலச் சிலை வடிமைக்கும் பணி இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இங்கு கருணாநிதியின் சிலை வடிவமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. 
இங்கு வடிவமைக்கப்படும் சிலையானது, சென்னை அண்ணா சாலையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்படும் எனத் தெரிகிறது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், புதுப்பேடு பகுதிக்கு வருகை தந்து, அங்கு  வடிவமைக்கப்பட்டு வரும் கருணாநிதியின் உருவச் சிலையை செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார். 
பின்னர், சிற்பி தீனதயாளனிடம் சிலை வடிவமைப்புப் பணிகள் குறித்துக் கேட்டறிந்தார். அப்போது 
மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, க.சுந்தரம், திருவள்ளூர் மாவட்டச் செயலர்  கி.வேணு, மீஞ்சூர் ஒன்றியச் செயலர்கள் ரமேஷ்ராஜ், சுகுமாரன், மீஞ்சூர் நகரச் செயலர் மோகன்ராஜ் மற்றும் திமுகவின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

More from the section

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் ஆதரவாக தீர்ப்பு கிடைக்கும்: தங்க. தமிழ்செல்வன் நம்பிக்கை
பசுக்களை திருடியதாக 2 பேர் கைது
அங்கன்வாடியில் ஊட்டச்சத்து வார விழா
சேதமடைந்த அங்கன்வாடி மையத்தை சீரமைக்கக் கோரிக்கை
செப். 26-இல் மக்கள் தொடர்பு திட்ட முகாம்