வியாழக்கிழமை 20 செப்டம்பர் 2018

வீட்டின் பூட்டை உடைத்து  8 சவரன், பொருள்கள் திருட்டு

DIN | Published: 12th September 2018 01:17 AM

திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் நகை, ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். 
திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை அருகே உள்ள திருவூரைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (37). இவரது மனைவி மோகனவல்லி. இருவரும் திங்கள்கிழமை வழக்கம் போல் வேலைக்குச் சென்றனர். 
பின்னர், மாலையில் வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 
8 சவரன் நகை, வீட்டில் இருந்த 
ரூ. 1 லட்சம் மதிப்பிலான தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் பல்வேறு பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.  இதுகுறித்து செவ்வாப்பேட்டை   போலீஸார் விசாரிக்கின்றனர். 

More from the section

திருவள்ளூரில் பலத்த காற்றுடன் மழை: மின்கம்பங்கள் சாய்ந்தன
பழவேற்காடு ஏரி முகத்துவாரப் பகுதியை தூர்வாரும் பணிகள் தொடக்கம்
திருத்தணியில் முன்னறிவிப்பு இன்றி மின்தடை: பொதுமக்கள் கடும் அவதி
என்.சி.சி. பயிற்சி முகாம் நிறைவு
பொதுத் துறை பாதுகாப்பு குறித்த கூட்டம்