வெள்ளிக்கிழமை 21 செப்டம்பர் 2018

14-இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

DIN | Published: 12th September 2018 01:15 AM

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 14) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.  
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பணிவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் நோக்கில், வாரந்தோறும் சிறு அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 14) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் வளர்ப்புப் பயிற்சிக்கான ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், பல தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தகுதியான பணியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். அதனால், இதில் 10, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் தவறாமல் கலந்து கொண்டு பயனடையலாம்.   மேற்காணும் கல்வித் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மேற்குறிப்பிட்ட நாளில் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் பணி நியமனம் பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

More from the section

செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தகராறு: நில உரிமையாளர் காயம்


வகுப்புகளைப் புறக்கணித்து ஆசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்: மாவட்டக் கல்வி அலுவலர் விசாரணை

அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம்
பல்பொருள் அங்காடி,  உணவகங்களில் ஆட்சியர் ஆய்வு: ரூ. 60 ஆயிரம் அபராதம் விதிப்பு
அரசு சட்டக் கல்லூரிகளில் முதுநிலை படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு: 180 பேருக்கு ஆணை வழங்கல்