தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற செப்.28-க்குள் விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற விரும்புவோர் செப்டம்பர் 28-ஆம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற விரும்புவோர் செப்டம்பர் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார். 
இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் கோரி மனு செய்ய விரும்புவோர் 2008-ஆம் ஆண்டு வெடிபொருள் சட்டப்படி அதற்குண்டான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து  செப்டம்பர் 
28-ஆம் தேதிக்குள் அளிக்கலாம். 
அதற்கு முன்னதாக படிவம் 5-இல் (பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் 6 பிரதிகள்) உரிமம் கோரும் இடத்திற்கான ஆவணங்கள், விற்பனை நிலைய வரைபடம் 6 பிரதிகள் மற்றும் 
ரூ.500-ஐ வங்கியில் செலுத்தியதற்கான அசல் செலுத்துச் சீட்டு ஆகிய விவரங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட பிரிவில் 
விண்ணப்பிக்கலாம்.
இதில், குறிப்பிட்ட நாள்களுக்குப் பின்னர் அனுப்பி வைக்கப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. எனவே, குறிப்பிட்ட காலத்திற்குள் பெறப்படும் மனுக்களை மட்டும் பரிசீலனை செய்து வரும் அக்டோபர் 20-ஆம் தேதிக்குள் தற்காலிக உரிமம் வழங்கப்படும் எனவும் அவர்  தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com