அங்கன்வாடியில் ஊட்டச்சத்து வார விழா

திருவள்ளூர் அருகே நத்தமேடு அங்கன்வாடியில் ஊட்டச்சத்து வார விழாவையொட்டி, குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு சத்தான உணவு வழங்கும் முறை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

திருவள்ளூர் அருகே நத்தமேடு அங்கன்வாடியில் ஊட்டச்சத்து வார விழாவையொட்டி, குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு சத்தான உணவு வழங்கும் முறை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் இம்மாதம் முழுவதும் ஊட்டச்சத்து வார விழாவைக் கொண்டாட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் நத்தமேடு அங்கன்வாடி வளாகத்தில் திங்கள்கிழமை ஊட்டச்சத்து வார விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் எ.புகழேந்தி கலந்துகொண்டு பேசியது: கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் வார விழாவாக இருந்த இவ்விழா, தற்போது மாத விழாவாக மாற்றப்பட்டுள்ளது. அந்தந்த பகுதியில் கிடைக்கும் தானியங்களில் தயாரிக்கப்பட்ட சத்தான உணவுகளை குழந்தைகள், தாய்மார்கள் ஆகியோருக்கு அளிக்க வேண்டும் என்றார் அவர்.
விழாவையொட்டி, அங்கன்வாடி வளாகத்தில் ஊட்டச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், தானியங்கள் உணவுகள் ஆகியவற்றை பார்வைக்கு வைத்திருந்தனர். இதை கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் இளம்பெண்களுக்கு எவ்வாறு அளிப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. 
அதைத் தொடர்ந்து, விழாவில் பங்கேற்ற பெண்களிடம் சத்தான உணவு வகைகள் குறித்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. 
இதில் வெற்றி பெற்ற பெண்கள் மற்றும் வளர் இளம் பெண்கள் 30 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை அங்கன்வாடி ஆசிரியர்கள் சுமலதா, தீபா மற்றும் உதவியாளர்கள் பிரியா, தேன்மொழி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com