திருவள்ளூர்

பசுக்களை திருடியதாக 2 பேர் கைது

DIN

திருவள்ளூர் அருகே மேய்ச்சலுக்குச் சென்ற பசுமாடுகளை திருடியது தொடர்பாக 2 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.   
இதுகுறித்து, திருவள்ளூர் கிராமிய போலீஸார் புதன்கிழமை கூறியதாவது: திருவள்ளூர் அருகே லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(30). இவர் கறவை மாடுகளை வைத்து பால் கறந்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், இவரது பசு மாடுகளை கடந்த 2 நாள்களுக்கு முன்பு எப்போதும் போல் புங்கத்தூர் ஏரியில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளார்.   
பின்னர், வீட்டுக்குச் சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, 2 மாடுகளும் காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் பசுக்கள் கிடைக்கவில்லை. இது தொடர்பாக திருவள்ளூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் நடத்திய  விசாரணையில், புட்லூரைச் சேர்ந்த ரேணுபாபு(35), காரணிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி(25) ஆகியோர் பசு மாடுகளை திருடிச் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து, அவர்கள் 2 பேரையும் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். 
மேலும், வேறு ஏதேனும் வழக்குகளில் அவர்களுக்குத் தொடர்புள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT