செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தகராறு: நில உரிமையாளர் காயம்

திருவள்ளூர் அருகே செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏற்பட்ட தகராறில் நில உரிமையாளர்

திருவள்ளூர் அருகே செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏற்பட்ட தகராறில் நில உரிமையாளர் மீது நடத்தப்பட்டது. இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 
திருவள்ளூர் அருகே கிளாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சைக்கனி (45). இவரது நிலத்தில் தனியார் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க அனுமதித்துள்ளார். அதன் அடிப்படையில் கோபுரம் அமைக்கும் பணி  நடைபெற்று வந்தது. 
இந்நிலையில், பக்கத்து நிலத்தைச் சேர்ந்த ஜெயபால், வேலாயுதம், சரவணன் ஆகியோர் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
  இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கவும், அதற்கு போலீஸார் பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட்டிருந்தது. 
இதன் அடிப்படையில் குறிப்பிட்ட இடத்தில் செவ்வாப்பேட்டை போலீஸார் பாதுகாப்புடன் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, மேற்குறிப்பிட்ட நபர்கள் எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதில் பச்சைக்கனியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 
இதையடுத்து, அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  
இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com