திருவள்ளூர்

புழல் சிறை வளாகத்தில் பெட்ரோல் நிலையம் அமைக்க பூமி பூஜை

DIN

புழல் மத்திய சிறை வளாகத்தில் பெட்ரோல் நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
புழல் சிறைக் கைதிகள் தண்டனைக் காலம் முடிந்து வெளியில் செல்லும்போது, அவர்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தும் வகையிலும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விடுவிக்கப்பட்ட கைதிகளுக்கு வேலை கொடுக்கும் நோக்கத்திலும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலமாக புழல் மத்திய சிறை வளாகத்தில் பெட்ரோல் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இதற்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறைத்துறை தலைவர் அசுதோஷ் சுக்லா, சிறைத்துறை டி.ஐ.ஜி.க்கள் கனகராஜ், முருகேசன் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

SCROLL FOR NEXT