மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 22 பேருக்கு ரூ.1.25 லட்சத்தில் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையாளர்
மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்


திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 22 பேருக்கு ரூ.1.25 லட்சத்தில் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையாளர் ப.மகேஸ்வரி வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்றக் கூட்டரங்கத்தில், மனவளர்ச்சி குன்றியோருக்கான பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை வகித்தார். இதில், மாநில மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் ப.மகேஸ்வரி கலந்து கொண்டு, மனவளர்ச்சி குன்றியோருக்காக செயல்பட்டு வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். 
அதைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகைக்கான ஆணைகளையும், 5 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன ஒளிரும் மடக்கு குச்சிகள் தலா ரூ. 3,296 மதிப்பிலும், 4 பேருக்கு தலா ரூ.4,170 மதிப்பிலான மோட்டார் பொருந்திய தையல் இயந்திரங்கள், மாற்றுத்திறனாளிகள் நல வாரிய சமூகப் பாதுகாப்பு திட்டம் மூலம் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிதி உதவியாக 5 பேருக்கு தலா ரூ 17 ஆயிரம் வீதத்திற்கான காசோலைகளையும், 5 பேருக்கு கல்வி உதவித்தொகை திட்டத்தில் தலா ரூ.7,500 மதிப்பிலான காசோலைகளையும் அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com