குரூப்-2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி

குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்த பட்டதாரி இளைஞர்கள் பயன்பெறும் நோக்கத்தில், திருவள்ளூர்


குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்த பட்டதாரி இளைஞர்கள் பயன்பெறும் நோக்கத்தில், திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் இலவசப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ் நாடு அரசுப் பணியாளார் தேர்வாணையம் குரூப்-2 காலிப்பணியிடங்களுக்குத் தேர்வு அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து பட்டதாரி இளைஞர்கள் ஏராளமானோர் விண்ணப்
பித்துள்ளனர்.
இதுபோன்று விண்ணப்பித்தோர் பயன்பெறும் வகையில், திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னார்வப் பயிலும் வட்டம் செயல்பட்டு
வருகிறது.
இங்கு மத்திய, மாநில போட்டித் தேர்வுகளுக்கான பல்வேறு புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன. அதோடு, சிறந்த ஆசிரியர்கள் மற்றும் குரூப்-1, 2 ஆகிய தேர்வுகளில் வெற்றி பெற்று பணி வாய்ப்பு பெற்றவர்களைக் கொண்டும் இலவசப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள தொகுதி-2 பணியிடங்களுக்கான போட்டித் தேர்விற்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.
இத்தேர்வுக்கு வார நாள்களில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையில் காலை 10 முதல் மாலை 5 மணி வரையில் வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.
இந்த வகுப்புகள் தேர்வு தொடங்கும் நாள் வரையில் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. அதனால், இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com