தோட்டக்கலைத் துறையில் இளைஞர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சி

இளைஞர்கள் பயன்பெறும் நோக்கத்தில் நுண்ணீர் பாசனம் தொடர்பாக தொழில் நுட்பப் பயிற்சி ஒரு வாரம் வரையில் அளிக்கப்பட இருப்பதாக தோட்டக் கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இளைஞர்கள் பயன்பெறும் நோக்கத்தில் நுண்ணீர் பாசனம் தொடர்பாக தொழில் நுட்பப் பயிற்சி ஒரு வாரம் வரையில் அளிக்கப்பட இருப்பதாக தோட்டக் கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் நுண்ணீர் பாசனம் தொடர்பான தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் நுண்ணீர் பாசனம் அமைப்பது தொடர்பான தொழில்நுட்பங்களை விளக்கமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதோடு இப்பயிற்சியில் நுண்ணீர் பாசன அமைப்பை தொடர்ந்து பராமரிப்பது தொடர்பான தொழில்நுட்பங்களும் வழங்கப்படவுள்ளன. இப்பயிற்சி முடித்த நபர்கள் பின்னர் நுண்ணீர்ப் பாசன நிறுவனங்கள், விவசாயிகள் ஆர்வலர் குழு, உற்பத்தியாளர் குழு, உற்பத்தியாளர் நிறுவனங்களில் பணிகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமுள்ளோர், தொழிற்பயிற்சி முடித்தவர்கள் (ஐடிஐ), தோட்டக்கலை, வேளாண்மைப் பட்டயம், சிவில் மற்றும் இயந்திரவியல் பட்டயப் படிப்பு படித்திருக்க வேண்டும். 16 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைவரும் இதில் பங்கேற்றுப் பயன்பெறலாம். இப்பயிற்சி ஒரு வாரம் வரை அளிக்கப்படும்.
பயிற்சி நடைபெறும் இடம்: சென்னை மற்றும் அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் சுய விவரங்களுடன்
விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை, வேளாண்மை வளாகம், சேப்பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரிக்கு அனுப்பி வைத்து பயன் பெறலாம். மேலும், இது தொடர்பாக அந்தந்த மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலைத் துறையை அணுகிப் பயன்பெறலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com