அறுந்து விழும் மின் கம்பிகளை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

திருத்தணி அருகே, வேலஞ்சேரி கிராமத்தில் வீடுகளின் மீது மின்கம்பிகள் அடிக்கடி அறுந்து விழுவதை சரி

திருத்தணி அருகே, வேலஞ்சேரி கிராமத்தில் வீடுகளின் மீது மின்கம்பிகள் அடிக்கடி அறுந்து விழுவதை சரி செய்யக்கோரி, கிராம மக்கள் திருத்தணி-நாகலாபுரம்  நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.  
திருத்தணியை அடுத்த வேலஞ்சேரியில், குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு வயர்கள் அடிக்கடி அறுந்து வீட்டின் மேல் விழுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
 இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் பல முறை புகார் கொடுத்தபின், தற்காலிகமாக சீரமைத்தனர். ஆனால், அதன் பின்னரும் மின் கம்பிகள் அறுந்து விழுவது தொடர்வதாகவும், இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
 இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை, மீண்டும் மின்கம்பி அறுந்து ஒரு வீட்டின் மேல் விழுந்ததால், ஆத்திரமடைந்த வேலஞ்சேரி கிராம மக்கள் திருத்தணி-நாகலாபுரம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அடிக்கடி அறுந்து விழும் மின்கம்பிகளை நிரந்தரமாக சீரமைக்கக் கோரியும், தரமான மின் வயர்களைப் பொருத்தக் கோரியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.  
தகவல் அறிந்த திருத்தணி டி.எஸ்.பி. சேகர்,  வட்டாட்சியர் செங்கலா ஆகியோர் நேரில் வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 
 இதையடுத்து, விரைவில் மின்துறை அதிகாரிகள் நேரில் வந்து நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி கூறியதைத் தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால், அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com