கலைத் திருவிழாவில் மாணவ, மாணவியர் பங்கேற்பு

திருவள்ளூர் மாவட்ட அளவிலான கலைதிருவிழாவில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் திரளானோர் கலந்து கொண்டனர். 

திருவள்ளூர் மாவட்ட அளவிலான கலைதிருவிழாவில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் திரளானோர் கலந்து கொண்டனர். 
தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில், மாணவ, மாணவியரின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையில், கலையருவி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், கலை வடிவங்கள், மொழியாற்றல், பாரம்பரியம், செவ்வியல், நவீனம், ஆன்மிகம், கலாசாரம், கிராமியம் மற்றும் நாட்டுப்புறம் ஆகிய பல்வேறு பிரிவுகளில் நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.  
இதன் அடிப்படையில், திருவள்ளூர் தனியார் பள்ளி வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் கலையருவி திருவிழா போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். திருவள்ளூர் சார் ஆட்சியர் த.ரத்னா போட்டியைத் தொடங்கி வைத்தார். 
திருவள்ளூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், கலைத் திருவிழா நிகழ்ச்சியில் முதல் சுற்றில் ஊராட்சி ஒன்றிய அளவில் 3 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அவர்களில், 964 மாணவர்கள் இரண்டாம் சுற்றுக்கு தேர்வாகியிருந்தனர். இதில், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான 115 பள்ளிகளைச் சேர்ந்த 385 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அவர்களுக்கு 25 வகையான போட்டிகள் நடத்தப்பட்டு, 79 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 
அதேபோல் 9 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான 105 பள்ளிகளைச் சேர்ந்த 579 மாணவர்களுக்கு 75 வகையான போட்டிகளை நடத்தினர். அவற்றில் 171 பேர் வெற்றி பெற்றனர். இப்போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள் மாநில அளவிலான கலையருவிப் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.   
நிகழ்ச்சியில், மாவட்டக் கல்வி அலுவலர்கள் கற்பகம் (திருவள்ளுர்), க.இளம்பரிதி (ஆவடி), ஷீலா பிளாரன்ஸ் (அம்பத்தூர்), க.முனிசுப்புராயன் (திருத்தணி), சாம்பசிவம் (பொன்னேரி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com