திருவள்ளூர்

குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

DIN

குடிநீர் கேட்டு பெண்கள் காலிக் குடங்களுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருத்தணி காந்தி பிரதான சாலையில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில், தெருக் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. 
இதனிடையே, கடந்த, 10 நாள்களாக தெருக்குழாய் களில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பெண்கள் குடிநீருக்காக கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.  
இந்நிலையில் 75-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் காந்தி பிரதான சாலையில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸார், உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் ஏற்பாடு செய்து தருவதாகவும், டிராக்டர் மூலம் குடிநீர் விநியோகம் செய்து தருவதாகவும் உறுதி கூறியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலங்குளம் அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் துணை ராணுவப் படை அணிவகுப்பு

ஊதிய உயா்வு ஒப்பந்த அமல் கோரி விசைத்தறியாளா்கள் வேலைநிறுத்தம்

ஆலங்குளம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கிராமப்புற கண்டுபிடிப்புகளை மேம்படுத்த புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT