5 இடங்களில் திமுக ஊராட்சி சபைக் கூட்டம்

கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் எளாவூர், மெதிப்பாளையம், சுண்ணாம்புகுளம், கெட்ணமல்லி, தண்டலச்சேரி ஆகிய இடங்களில்


கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் எளாவூர், மெதிப்பாளையம், சுண்ணாம்புகுளம், கெட்ணமல்லி, தண்டலச்சேரி ஆகிய இடங்களில் திமுக ஊராட்சி சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலர் டி.ஜே.கோவிந்தராஜன் தலைமையில் இக்கூட்டங்கள் நடைபெற்றன. எளாவூரில் திமுக நிர்வாகிகள் தியாகராயன், பிரபாகரன் ஏற்பாட்டில் நடந்த கூட்டத்தில், எளாவூர் பகுதியில் தடையில்லா மின்சாரம், தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுத்தல், சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை கிராமத்தினர் முன் வைத்தனர்.
மெதிப்பாளையத்தில் மாவட்டப் பிரதிநிதி ராமஜெயம் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில்,  செயல்படாத மேல்நிலைத் தொட்டிக்கு பதில் புதிய மேல்நிலைத் தொட்டி அமைத்தல், சாலை வசதி, பேருந்து வசதி , பள்ளிக்கு சுற்றுச்சுவர் உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் முன் வைத்தனர்.
சுண்ணாம்புகுளத்தில் முன்னாள் கவுன்சிலர் பல்லவன், பரிமளம் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில், மோசமான சாலைகளை சீரமைத்தல், நூறு நாள் வேலையை  முறையாக வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. 
கெட்ணமல்லியில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தட்சிணாமூர்த்தி, சங்கர் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் தங்கள் பகுதியில் விவசாயம் பாதிக்கப்படுவதாக கோரிக்கை வைக்கப்பட்டது. தண்டலச்சேரியில் டி.எஸ்.மணி ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் ரேஷன் கடை உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. இந்த 5 ஊராட்சிகளிலும் சிறப்பு அழைப்பாளர்களாக திமுகவின் திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலர் கி.வேணு, எம்எல்ஏ கு.க.செல்வம் ஆகியோர் பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com