உதவித் தொகை கோரி கிராமத்தினர் மறியல்

பொன்னேரி அருகே சின்னகாவனம் கிராமத்தில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் அனைவரையும்


பொன்னேரி அருகே சின்னகாவனம் கிராமத்தில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் அனைவரையும் முழுமையாக கணக்கெடுத்து, அரசின்  உதவித் தொகையை வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். 
சின்னக்காவனம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 
இந்நிலையில், குறைவான குடும்பத்தினர் மட்டுமே வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் என கணக்கெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 
இதையடுத்து, அப்பகுதியில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள அனைவரையும் முறையாக கணக்கெடுத்து, அவர்களுக்கு அரசு அறிவித்த ரூ. 2 ஆயிரம் உதவித் தொகை வழங்கவும், அங்குள்ள கழிவு நீர் கால்வாயை சீரமைக்கவும், அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கவும் கோரி, பொன்னேரி-பழவேற்காடு சாலையில் பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற பொன்னேரி வருவாய்த் துறையினர் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com