பணித்தள பொறுப்பாளர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்

திருத்தணி அருகே 100 நாள் வேலைத் திட்டத்தில், பணித்தள பொறுப்பாளரை மாற்றியதைக் கண்டித்து கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பணித்தள பொறுப்பாளர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்

திருத்தணி அருகே 100 நாள் வேலைத் திட்டத்தில், பணித்தள பொறுப்பாளரை மாற்றியதைக் கண்டித்து கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருத்தணி ஒன்றியம், சூரிய நகரம் ஊராட்சியில், 100 நாள் வேலையைக் கண்காணிக்கவும், வருகைப் பதிவேடு எடுப்பதற்கும், பணித்தள பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவது வழக்கம்.  அந்த வகையில், கடந்தாண்டு, அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில்  அப்பொறுப்பில் ராஜாத்தி என்பவர் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், ராஜாத்தியை மாற்றி, வேறு ஒரு பெண்ணுக்கு அந்த பொறுப்பை வழங்க ஒன்றிய நிர்வாகம் முடிவெடுத்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து அறிந்ததும் ராஜாத்திக்கு ஆதரவாக, 100-க்கும் மேற்பட்ட பெண்கள் வியாழக்கிழமை காலை திருத்தணி - பொதட்டூர்பேட்டை மாநில நெடுஞ்சாலையில் சூரிய நகரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் திருத்தணி போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணித்தள பொறுப்பாளருக்கு 100 நாள்கள் மட்டுமே அந்த பணியில் இருக்க முடியும். பின்னர், அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவர். 
இது மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவு எனக்கூறி சமரசம் செய்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com