அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணி மேற்கொண்ட மாணவியர்

திருத்தணி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் மற்றும் பிரசவ வார்டுகளில் தனியார் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவியர்

திருத்தணி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் மற்றும் பிரசவ வார்டுகளில் தனியார் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவியர் சனிக்கிழமை தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர்.
திருவள்ளூர் பகுதியில் உள்ள திருமுருகன் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவியர் 30-க்கும் மேற்பட்டோர் கடந்த 18-ஆம் தேதி முதல் திருத்தணி நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்கி தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, மத்தூர் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோயில், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் தூய்மைப் பணியாற்றினர். சனிக்கிழமை, திருத்தணி அரசு பொது மருத்துவமனையை தூய்மை செய்யும் பணிகளை மேற்கொண்டனர். இப்பணிகளை திருத்தணி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஹேமாவதி தொடங்கி வைத்தார். பின்னர், மாணவியர், மருத்துவமனையில் உள்ள உள்நோயாளிகள், காய்ச்சல், பிரசவம் மற்றும் அவசரப் பிரிவு போன்ற வார்டுகளில் கதவு, ஜன்னல் மற்றும் மேற்கூரை ஆகிய இடங்களை சுத்தம் செய்தனர்.
மேலும், மருத்துவமனை வளாகத்தில் இருந்து பிளாஸ்டிக் பைகள், மருத்துவக் கழிவுகளை ஆகியவற்றை அகற்றினர். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பங்கேற்றனர். 
இதனிடையே, திருத்தணியில் சனிக்கிழமை காலை பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதை திருத்தணி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சேகர் பேரணியைத் தொடங்கி வைத்தார். பேரணியில் பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்த வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை மாணவிகள் கையில் ஏந்திச் சென்றனர். பேரணி நகர முக்கிய சாலைகள் வழியாக நகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com