20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்: வேலூர், திருவள்ளூரைச் சேர்ந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதி

திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா வந்த வேன் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 9 பேர் படுகாயமடைந்தனர்.
20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்: வேலூர், திருவள்ளூரைச் சேர்ந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதி


திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா வந்த வேன் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 9 பேர் படுகாயமடைந்தனர்.
பொங்கல் விடுமுறையைக் கொண்டாட, திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 22 பேர் நீலகிரி மாவட்டத்துக்கு வேனில் கடந்த செவ்வாய்க்கிழமை வந்துள்ளனர். குன்னூர், உதகை, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்த்துள்ளனர்.
பின்னர், மீண்டும் ஊருக்குத் திரும்ப கோத்தகிரி-மேட்டுப்பாளையம் வழியாக வியாழக்கிழமை வந்து கொண்டிருந்தனர். கோத்தகிரி சாலையில் குஞ்சப்பனை அருகே வந்தபோது முதல் கொண்டை ஊசி வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 20 அடி பள்ளத்தில் வேன் விழுந்தது.
இதில், வேனில் பயணம் செய்தவர்கள் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் படுகாயமடைந்த, திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு முனுசாமி மகன் ரவி (51), இவரது மனைவி சரளா (40), இவர்களது மகள் ஜோதிகா (16), இதே இடத்தைச் சேர்ந்த முத்து மகன் ரவி (47), அருள்குமார் மகள் கவிதா (34), வேலூர் மாவட்டம் மேல்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரோஸ் மகன் ராஜா (48), இவரது மனைவி அம்மு (40), இவர்களது மகன் குமரன் (19), சுற்றுலா வேன் ஓட்டுநரான வேலூர் மாவட்டம், அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் ரமேஷ் (27) ஆகிய 9 பேரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேனில் வந்த மேலும் 10 பேர் லேசான காயங்களுடன் தப்பினர்.
இதையடுத்து, சம்பவ இடத்தில் மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சென்னகேசவன், துணை ஆய்வாளர் திலக், வனத் துறை நிலைய அலுவலர் பொறுப்பு அர்ஜுனன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com