உலகச் சான்றோர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா

திருவண்ணாமலை உலகச் சான்றோர் சங்கம், திருவண்ணாமலை நந்தினி பதிப்பகம் இணைந்து முப்பெரும் விழாவை நடத்தின.

திருவண்ணாமலை உலகச் சான்றோர் சங்கம், திருவண்ணாமலை நந்தினி பதிப்பகம் இணைந்து முப்பெரும் விழாவை நடத்தின.
பேராசிரியர் த.சித்ரா எழுதிய இலக்கியக் காரிகைகள் என்ற நூல் வெளியீட்டு விழா, எழுத்தாளர் ந.சண்முகம் தொகுத்த வாழ்கிறார் கலைஞர் நூல் வெளியீட்டு விழா, சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு திருவண்ணாமலை உலகச் சான்றோர் சங்கத்தின் நிறுவனர் தலைவர் மாம்பலம் ஆ.சந்திரசேகர் தலைமை வகித்தார். வியாபாரிகள் சங்க நிர்வாகி மு.மண்ணுலிங்கம், அக்ரி செ.வெங்கிடாசலபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உலகச் சான்றோர் சங்க பொதுச் செயலரும், எழுத்தாளருமான உமாதேவி பலராமன் வரவேற்றார்.
தொடர்ந்து, நல்லாசிரியர் அர.அனுசுயாதேவி தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. இதையடுத்து, பேராசிரியர் த.சித்ரா எழுதிய இலக்கியக் காரிகைகள் என்ற நூலை முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.விஜயகுமார் வெளியிட, தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற பா.இந்திரராஜன், பா.சம்பத்குமார், பேராசிரியர் இல.ரேவதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பேராசிரியர் எஸ்.சித்ரா ஏற்புரை வழங்கினார்.
தொடர்ந்து, எழுத்தாளர் ந.சண்முகம் எழுதிய வாழ்கிறார் கலைஞர் என்ற நூலை மதிப்புறு முனைவர் மா.சின்ராஜ் வெளியிட, ஓவியர் சொ.ஏ.நாகராஜன், வாசகர் வட்டத் தலைவர் அ.வாசுதேவன், நல்லாசிரியர் வெ.சென்னம்மாள் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
அருணை கல்விக் குழும நிர்வாக இயக்குநர் எ.வ.வே.கம்பன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார். விழாவில், பேராசிரியர்கள் ம.பாண்டித்துரை, மு.லோகநாயகி, ப.ஜோதிலட்சுமி, லதா பிரபுலிங்கம், கா.கவிதா, சு.பச்சையம்மாள், ஆசிரியர் மு.பிரசன்னா, பாவலர் சொல்லினியன், ஜெகதீசன் உள்பட 30 பேருக்கு சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com