செய்யாறு அரசுப் பள்ளியில் 5 திறன்மிகு வகுப்பறைகள் திறப்பு

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நூற்றாண்டு தொடக்க விழாவில், ரூ.15 லட்சத்தில் அமைக்கப்பட்ட 5 திறன்மிகு வகுப்பறைகளை (ஸ்மார் கிளாஸ்) மாவட்ட முதன்மைக் கல்வி 

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நூற்றாண்டு தொடக்க விழாவில், ரூ.15 லட்சத்தில் அமைக்கப்பட்ட 5 திறன்மிகு வகுப்பறைகளை (ஸ்மார் கிளாஸ்) மாவட்ட முதன்மைக் கல்வி 
அலுவலர் வி.ஜெயகுமார் திறந்து வைத்தார்.
முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் பி.கந்தசாமி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் எம்.எஸ்.சுகானந்தம் வரவேற்றார். சங்கச் செயலர் டி.கே.பொன்னுசாமி அறிமுக உரையாற்றினார். செய்யாறு மாவட்டக் கல்வி அலுவலர் பி.நடராஜன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியின்போது, சென்னை ஆர்பஜன் டெக்னாலஜிஸ் நிறுவனர்  என்.ராம்குமார், யுஎஸ்ஏ கலிபோர்னியா டப்ளின் ஆர்.ரவிசங்கர், மூ.செந்தில், மூ.தமிழ்ச்செல்வன், கணினி ஆசிரியர் பி.ராமு ஆகியோரின் மூலம் சுமார் ரூ.15 லட்சத்தில் அமைக்கப்பட்ட 5 திறன்மிகு வகுப்பறைகளை திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் திறந்துவைத்தார். மேலும், இந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சுமார் ரூ.93 லட்சத்தில் பள்ளியில் பல்வேறு புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு, தனியார் பள்ளிகளுக்கு இணையாக இந்த அரசுப் பள்ளியை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது பாராட்டுதலுக்குரியதாகும் என வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
நன்கொடையாளர்களுக்கு பாராட்டு: ரூ.15 லட்சத்தில் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்க நன்கொடை அளித்தவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு, நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் ஆர்.கே.மெய்யப்பன், கல்வி வளர்ச்சிக் குழுத் தலைவர் பி.லோகநாதன், துணைத் தலைவர்கள் அக்ரி எஸ்.தனசேகர், எஸ்.கோவிந்தராஜ், எம்.மணிவாசகம், உதவித் தலைமை ஆசிரியர் பி.சங்கர் மற்றும் முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com