மருந்தாளுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டக் கிளை சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டக் கிளை சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 திருவண்ணாமலை வேங்கிக்கால் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலர்கள் லட்சுமி நாராயணன், அன்பழகன், சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் கே.மணி வரவேற்றார்.
 மாவட்ட அமைப்புச் செயலர் என்.பார்த்தசாரதி, மாவட்டச் செயலர் எஸ்.கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
 ஆர்ப்பாட்டத்தில், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மக்கள் நலன் கருதி மருந்தியல் சட்டப்படி, மருந்துகளை மருந்தாளுநர்கள் மட்டுமே கையாள வேண்டும்.
 தலைக்காயம், விபத்து சிகிச்சைப் பிரிவுகளுக்கு மருந்துகள் வழங்க மருந்தாளுநர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் துணைத் தலைவர்கள் அன்பரசி, பூங்கோதை, கலையரசி, முருகன், மதிவாணன், சக்திவேல், முரளிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com