அருணாசலேஸ்வரர் கோயிலில் சமயப் பேரவை நிகழ்ச்சிகள் தொடக்கம்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் தீபத் திருவிழாவையொட்டி, சனிக்கிழமை சமயப் பேரவை நிகழ்ச்சிகள் தொடங்கின.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் தீபத் திருவிழாவையொட்டி, சனிக்கிழமை சமயப் பேரவை நிகழ்ச்சிகள் தொடங்கின.
கோயிலில் உள்ள சத்திய விலாச சபா மண்டபத்தில் சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடக்க விழா நடைபெற்றன. கோயில் இணை ஆணையர் ரா.ஞானசேகர் தலைமை வகித்து, சமயப் பேரவை நிகழ்ச்சிகளைத் தொடக்கிவைத்தார்.
தொடர்ந்து, அடியார்க்கினியான் என்ற தலைப்பில் கன்னியாகுமரி சிவ.ஜெயக்குமார், ஆட்கொள்ளும் அண்ணாமலை என்ற தலைப்பில் பேராசிரியர் ப.வேட்டவராயன் ஆகியோர் சமயச் சொற்பொழிவாற்றினர்.
சமயப் பேரவை நிகழ்ச்சிகளின் 2-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 18) மாலை அன்பே சிவம், அன்பே சிவம் என்ற தலைப்பில் உபன்யாச செம்மல் லதா கதிர்வேல், நாதன் நாமம் நமசிவாயமே என்ற தலைப்பில் இரா.ருக்குமணி ஆகியோர் சமயச் சொற்பொழிவு நிகழ்த்துகின்றனர்.
பக்தி நிகழ்ச்சிகள்: இதுதவிர, தினமும் காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையும் கோயில் கலையரங்கில் பல்வேறு பக்தி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு திருவண்ணாமலை மகான்கள் என்ற தலைப்பில் திருவண்ணாமலை தமிழறிஞர் ந.சண்முகம் சொற்பொழிவாற்றுகிறார்.
மாலை 6 மணிக்கு மீனாட்சி அங்கப்பன் குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com