மக்களவைத் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வலியுறுத்துவோம்: எ.வ.வேலு எம்எல்ஏ

 வரும் மக்களவைத் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வலியுறுத்துவோம் என்று எ.வ.வேலு எம்எல்ஏ கூறினார்.


 வரும் மக்களவைத் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வலியுறுத்துவோம் என்று எ.வ.வேலு எம்எல்ஏ கூறினார்.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக சார்பில், மக்களவைத் தொகுதி பணிக்குழுவினருக்கான ஆலோசனைக் கூட்டம் ஆரணியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்டச் செயலர் ஆர்.சிவானந்தம் தலைமை வகித்தார். ஆரணி மக்களவைத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் பார்த்தீபன் முன்னிலை வகித்தார்.
இதில், சிறப்பு அழைப்பாளராக எ.வ.வேலு எம்எல்ஏ கலந்துகொண்டு பேசியதாவது: ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ஆரணி, செய்யாறு, போளூர், வந்தவாசி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம் என 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில், 4 தொகுதிகளில் திமுகவைச் சேர்ந்தவர்கள் எம்எல்ஏக்களாக உள்ளனர். ஆகையால், வரும் மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கும், மற்ற கட்சிகளுக்கும் கூட்டணி ஏற்பட்டால், ஆரணி தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க வலியுறுத்துவோம்.
தமிழகத்தில் திமுக தனித்து போட்டியிட்டாலே வெற்றி பெறுவது உறுதி. எனவே, கட்சியின் பொறுப்பாளர்களை நம்பி, திமுக தனித்துப் போட்டியிட தலைமையிடம் வலியுறுத்துவோம். ஒரு வாக்குச் சாவடிக்கு 20 பேரை பொறுப்பாளர்களாக நியமித்து கட்சியினர் செயல்பட வேண்டும். புதிய வாக்காளர்களை அடையாளம் கண்டு திமுகவுக்கு வாக்களிக்கச் செய்ய வேண்டும் என்றார்.
கூட்டத்தில் எம்எல்ஏக்கள் (போளூர்) கே.வி.சேகரன், (வந்தவாசி) அம்பேத்குமார், (செஞ்சி) மஸ்தான், வி.குமரன், மாவட்ட அவைத் தலைவர் கே.ஆர்.சீதாபதி, முன்னாள் எம்எல்ஏக்கள் ஏ.ராஜேந்திரன், ஏ.சி.வி.தயாநிதி, அன்பழகன், பாண்டுரங்கன், இளைஞரணி எவரெஸ்ட் நரேஷ், மாவட்ட நிர்வாகி தரணிவேந்தன், இலக்கிய அணி மாவட்டச் செயலர் விண்ணமங்கலம் ரவி, நகர, ஒன்றியச் செயலர்கள் ஏ.சி.மணி, எஸ்.எஸ்.அன்பழகன், வெள்ளைகணேசன், தட்சிணாமூர்த்தி, வழக்குரைஞர் ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com