புதன்கிழமை 14 நவம்பர் 2018

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

DIN | Published: 12th September 2018 07:04 AM

செங்கம், புதுப்பாளையம் பேரூராட்சிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுப்பாளையம் பேரூராட்சியில் நடைபெற்ற பேரணியை புதுப்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் சுகந்தி கொடியசைத்து தொடக்கிவைத்தார். 
இதில், புதுப்பாளையம் அரசுப் பள்ளி மாணவர்கள், பேரூராட்சிப் பணியாளர்கள் கலந்துகொண்டு பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து முழக்கங்களை எழுப்பியவாறு முக்கிய வீதிகள் வழியாகச் சென்றனர்.
இதேபோல, செங்கம் பேரூராட்சியில் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியில் செங்கம் மேல்பாளையம் அரசுப் பள்ளி மாணவர்கள், ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து முக்கிய வீதிகள் வழியாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், பேரூராட்சிப் பணியாளர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
 

More from the section

காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி எஸ்.பி. அலுவலகத்தில் புகார்
வன்கொடுமைத் தடுப்பு வழக்கு: 5 பேருக்கு சிறை
குழந்தைகள் தின விழா
முதியோர் இல்லத்தில் தடுப்பூசி முகாம்
அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு