வியாழக்கிழமை 20 செப்டம்பர் 2018

ரூ.8.20 லட்சத்திலான வளர்ச்சித் திட்டப் பணிகள் நிறைவு

DIN | Published: 12th September 2018 07:03 AM

கீழ்பென்னாத்தூர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிறைவேற்றப்பட்ட ரூ.8.20 லட்சத்திலான பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கடைப்பிடிகப்பட்டது.
கீழ்பென்னாத்தூர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், வெறையூரை அடுத்த பனையூர் ஊராட்சியில் ரூ.3.20 லட்சத்தில் சிறுமின் விசைப் பம்பு, சு.நல்லூர் ஊராட்சி ஏரிகோடி பகுதியில் ரூ.2.50 லட்சத்தில் சிறுபாலம், தி.வலசை ஊராட்சி திருவாணைமுகம் கிராமத்தில் ரூ.2.50 லட்சத்தில் சிமென்ட் சாலை உள்பட ரூ.8.20 லட்சம் மதிப்பிலான பணிகள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவடைந்த வளர்ச்சித் திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தொகுதி எம்எல்ஏ கு.பிச்சாண்டி செவ்வாய்க்கிழமை அர்ப்பணித்தார். இதற்கான நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலர் சி.மாரிமுத்து, மாவட்டப் பிரதிநிதி வு.பழனி, ஊராட்சிச் செயலர் பிச்சாண்டி உள்பட பலர் கலந்து 
கொண்டனர்.
 

More from the section


ராஜபுஷ்கர் விருது பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

செப்.28-இல் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம்

மண்டல விளையாட்டுப் போட்டி: ராஜலட்சுமி பாலிடெக்னிக் 
மாணவர்கள் சிறப்பிடம்


மாற்றுத் திறனாளி மாணவர்கள் மையத்தில் ஆய்வு


பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் பயன் பெற கிராமப்புற ஏழை, எளியோர் விண்ணப்பிக்கலாம்