திருவண்ணாமலை

பிரதமருக்கு கடிதம் எழுதும் போட்டி

DIN

திருவண்ணாமலையை அடுத்த சாவல்பூண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பிரதமருக்கு தூய்மை நிகழ்வுகள் குறித்து கடிதம் அனுப்பும் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை வட்டாரக் கல்வி அலுவலர் ஷகிலா தலைமை வகித்து, போட்டிகளைத் தொடக்கி வைத்தார். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் மதனா முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் சரவணன் வரவேற்றார். பள்ளி மாணவ, மாணவிகள் பலர் பிரதமருக்கு கடிதம் எழுதி அனுப்பினர்.
இதைத் தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்களுக்கு சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து துண்டுப் பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

SCROLL FOR NEXT