திருவண்ணாமலை

சேத்பட்டில் சங்கர நேத்ராலயாவின் புதிய கண் மருத்துவமனை திறப்பு

தினமணி

ஆரணியை அடுத்த சேத்துப்பட்டில் சங்கர நேத்ராலயாவின் புதிய கண் மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
 ஏழை, எளியோருக்கு கண்ணுக்குள் பொருத்தும் செயற்கை லென்ஸ் உடன் கூடிய அறுவைச் சிகிச்சையை முற்றிலும் இலவசமாக சங்கர நேத்ராலயா நிறுவனம் வழங்கி வருகிறது. கண் மருத்துவ சேவையை விரிவுபடுத்தும் வகையில், சேத்துப்பட்டில் சூரஜ் சங்கர நேத்ராலயா என்ற பெயரில் புதிய கண் மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு திருவண்ணாமலை பிரம்மா குமாரிகள் அமைப்பின் நிர்வாகி பி.கே.உமா தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு புதிய மருத்துவமனையை திறந்து வைத்துப் பேசினார்.
 விழாவில், சங்கர நேத்ராலயாவின் பயனாளிகள் தொடர்பு மேலாளர் வி.சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆச்சார்யா ஸ்ரீஹஸ்தி ஆராதன்னா அறக்கட்டளை தலைவர் சூரஜ்மால் ஜெயின் நன்கொடையாக வழங்கிய கட்டடத்தில் இந்த மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

SCROLL FOR NEXT