திருவண்ணாமலையில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

திருவண்ணாமலை நகரின் மையப் பகுதியில் 3 கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.52 ஆயிரம் மதிப்பிலான குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

திருவண்ணாமலை நகரின் மையப் பகுதியில் 3 கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.52 ஆயிரம் மதிப்பிலான குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 3 குடோன்களுக்கு "சீல்' வைக்கப்பட்டது.
 திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையப் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை அதிகமாக நடைபெறுவதாகவும், இதே பகுதியில் உள்ள கிடங்கில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் திருவண்ணாமலை மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.
 இதையடுத்து, உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் மோகன்குமார், ராஜ்குமார் உள்பட 8 பேரைக் கொண்ட குழுவினர் வியாழக்கிழமை திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் எதிரே சிவன்படத் தெருவில் உள்ள 3 கிடங்குகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட ஏராளமான புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ரூ.52 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், 3 கிடங்குகளுக்கும் "சீல்' வைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் ஆய்வுக்காக சேலத்தில் உள்ள ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com