திருவள்ளுவர் பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்

வந்தவாசி திருவள்ளுவர் பொறியியல் கல்லூரி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி சார்பில், ரத்த தான முகாம் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி திருவள்ளுவர் பொறியியல் கல்லூரி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி சார்பில், ரத்த தான முகாம் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 முகாமுக்கு கல்லூரி நிறுவனர் முனைவர் ச.அருணாச்சலம் தலைமை வகித்தார். தெள்ளாறு வட்டார மருத்துவ அலுவலர் கே.செல்வமுத்துகுமாரசாமி, கல்லூரி தாளாளர் பாலாமணி அருணாச்சலம், கல்லூரி துணைத் தலைவர் அ.கணேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் முகாமை தொடக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மேலும், ரத்த தானம் அளித்த மாணவர்களுக்கு அவர் சான்றிதழ்களை வழங்கினார்.
 மருத்துவர்கள் மாலதி, நவீனா, ஹித்தேன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மாணவ, மாணவிகளிடமிருந்து ரத்தம் தானமாகப் பெற்றனர். முகாமில் மொத்தம் 137 யூனிட் ரத்தம் தானமாகப் பெறப்பட்டது. இதில், கல்லூரி இயக்குநர் பிரபாகரன், சுகாதார ஆய்வாளர்கள் எம்.கோதண்டராமன், ஆர்.பாஸ்கர், பி.கணேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com