திருவண்ணாமலை

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
2018 ஜனவரி 1-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளிலும் சனிக்கிழமை சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த முகாம்களில் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை வாக்காளர்கள் பலர் சரிபார்த்தனர். மேலும், புதிதாக பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் தொடர்பான மனுக்களையும் பொதுமக்கள் அளித்தனர்.
ஆரணி பகுதியில்...: ஆரணி பகுதியில் காட்டுகாநல்லூர், கண்ணமங்கலம், ஆரணி நகரம், இந்திரவனம் மற்றும் சேத்துப்பட்டு பழம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான முகாமை மத்திய தேர்தல் பார்வையாளர் சந்தோஷ்மிஸ்ரா பார்வையிட்டு ஆய்வு செய்தார். உதவி ஆட்சியர் (பயிற்சி) மு.பிரதாப், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் உமாமகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசபாபதி, ஆரணி வட்டாட்சியர் கிருஷ்ணசாமி, நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.1.75 லட்சம் பறிமுதல்

வாக்காளா்களுக்கு தோ்தல் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT