ஆட்சியர் அலுவலகத்தில் சகோதரிகள் தீக்குளிக்க முயற்சி

மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், மனமுடைந்த சகோதரிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றனர்.


மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், மனமுடைந்த சகோதரிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வந்தவர்களில் 2 பெண்கள் திடீரென தாங்கள் மறைத்து எடுத்து வந்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதைப் பார்த்த போலீஸôர் இருவரையும் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

இதில், அவர்கள் இருவரும் தண்டராம்பட்டு பகுதியைச் சேர்ந்த  ராஜாத்தி, காசியம்மாள் என்பதும், இவர்களது தந்தையின் முதல் மனைவியின் மகன் பன்னீர், தந்தையின் சொத்துகளை ஏமாற்றி தன் பெயருக்கு மாற்றிக் கொண்டதும், இதுதொடர்பாக இருவரும் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியிடமும், தண்டராம்பட்டு காவல் நிலையத்திலும் மனுக்கள் அளித்து, அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மனமுடைந்த அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றது தெரிய வந்தது. 

இதையடுத்து, தீக்குளிக்க முயன்ற 2 பேரிடமும் போலீஸôர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com