இளந்தொழில் முனைவோர் கருத்தரங்கு

திருவண்ணாமலை குமரன் பாலிடெக்னிக் கல்லூரியின் வேலைவாய்ப்புத் துறை சார்பில், இளந்தொழில் முனைவோர்களுக்கான சிறப்புக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை குமரன் பாலிடெக்னிக் கல்லூரியின் வேலைவாய்ப்புத் துறை சார்பில், இளந்தொழில் முனைவோர்களுக்கான சிறப்புக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி துணைத் தலைவர் எ.வ.குமரன் தலைமை வகித்தார். கல்லூரி இயக்குநர் பொன்.முத்து முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை மாவட்ட தொழில் மைய உதவிப் பொறியாளர் எஸ்.சுபாஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு இளந்தொழில் முனைவோருக்கான வழிமுறைகள், தொழில் முனைவோர்களுக்கு மாவட்ட தொழில் மையம் எவ்வாறு பக்கபலமாக உள்ளது, கடன் வசதிகளைப் பெறுவது எப்படி என்பது குறித்து விளக்கிப் பேசினார்.
கருத்தரங்கில், கல்லூரி ஆலோசகர் எம்.ரவிச்சந்திரன், கல்லூரி முதல்வர் அண்ணாதுரை மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com