குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: திமுக கூட்டத்தில் தீர்மானம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்


திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட கட்சியின் ஊராட்சிச் செயலர்கள், நகராட்சி, பேரூர், வட்டக் கழகச் செயலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.  திருவண்ணாமலை - திருக்கோவிலூர் சாலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் த.வேணுகோபால் தலைமை வகித்தார்.
தணிக்கைக் குழு உறுப்பினர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். மாவட்டத் துணைச் செயலர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன் வரவேற்றார். 
கூட்டத்தில் தமிழக முன்னாள் அமைச்சரும், மாவட்ட திமுக செயலருமான எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் பணிகள், அதற்கான ஆக்கப் பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்த அனுமதி வழங்கிய மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடத்த ஒத்துழைப்பு வழங்கி திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகளுக்குப் பாராட்டுத் தெரிவிப்பது,  மாவட்டத்தில் வறட்சி ஏற்பட்டு, குடிநீர் தட்டுபாடு நிலவுகிறது. எனவே, போர்கால அடிப்படையில், குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மு.பெ.கிரி (செங்கம்), கே.வி.சேகரன் (போளூர்), கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், நகரச் செயலர் ப.கார்த்திவேல் மாறன், மருத்துவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை மற்றும் செங்கம், தண்டராம்பட்டு, திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், துரிஞ்சாபுரம், கலசப்பாக்கம், ஜவ்வாதுமலை, புதுப்பாளையம், போளூர் (வடக்கு) ஒன்றியங்களுக்கு உள்பட்ட கட்சியின் ஊராட்சிச் செயலர்கள், திருவண்ணாமலை நகரம், கீழ்பென்னாத்தூர், வேட்டவலம், செங்கம், புதுப்பாளையம், களம்பூர் பேரூராட்சிகளுக்கு உள்பட்ட கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com