திருமுறை விழா தொடக்கம்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் பன்னிரு திருமுறை விழாவின் தொடக்க நிகழ்ச்சி சனிக்கிழமை  நடைபெற்றது.


திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் பன்னிரு திருமுறை விழாவின் தொடக்க நிகழ்ச்சி சனிக்கிழமை  நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் காலை 8 மணிக்கு திருமுறை வழிபாடும், காலை 9 மணிக்கு குமாரவயலூர் ஆர்.பாலச்சந்தர் ஓதுவார் குழுவினரின் திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும், காலை 10 மணிக்கு முதல், இரண்டாம் திருமுறை குறித்த சங்கரநாராயணனின் சொற்பொழிவும் நடைபெற்றன. மாலை 4 மணிக்கு திருமுறை பாராயணம், மாலை 5 மணிக்கு பன்னிரு திருமுறை திருவிழாவின் தொடக்க விழா ஆகியவை நடைபெற்றன.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். திருவாவடுதுறை தருமபுர ஆதீனத்தின் இளைய மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, பக்தர்களுக்கு அருளாசி வழங்கிப் பேசினார். தொடர்ந்து, 3-ஆம் திருமுறை, 4-ஆம் திருமுறை குறித்த நாகர்கோவிலைச் சேர்ந்த பேராசிரியர் ராசாராம் பேசினார்.
இதில், இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா, விழாக்குழு நிர்வாகிகள், பக்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருமுறை விழா நிகழ்வு தொடர்ந்து, ஞாயிறு, திங்கள் (பிப்ரவரி 24, 25) ஆகிய நாள்களிலும் நடைபெற உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com